நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட குவாண்டாஸ் விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
QF 144 தாங்கிய இந்த போயிங் 737 விமானம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 168 பயணிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.
ஆகாயத்தில் 38,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த விமானம், ஆஸ்திரேலியா அருகே திடீரென 20,000 அடிக்கு கீழே இறங்கியது.
விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இது பாதிக்கப்பட்டுள்ளது, அதன்படி விமானிகள் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குவாண்டாஸ் விமானம் சிட்னி நேரப்படி பிற்பகல் 03.28 மணியளவில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதுடன் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.