2022 ஆம் ஆண்டில் கடுமையான இணைய தணிக்கை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
Global Internet Censorship அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் 4.2 பில்லியன் மக்கள் இணைய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையையும் உள்ளடக்கிய ஆசியக் கண்டம் அதிக இணையத் தணிக்கையைக் கொண்ட பிராந்தியமாக அறிக்கை காட்டுகிறது.
சமூக-பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 32 நாடுகள் கடந்த ஆண்டு பல்வேறு இணைய தணிக்கையை அமல்படுத்தியுள்ளன.
கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.