2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைபேசி குறுஞ்செய்தி மோசடியாக கருதப்படும் Hi Mum மோசடியில் மெல்போர்ன் குடியிருப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
6 வார விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இந்த நபருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து பெற்ற பணத்தை பயன்படுத்தி கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
Hi Mum மோசடி என்பது தெரியாத எண்ணிலிருந்து உங்கள் மகன் அல்லது மகளிடம் கிரெடிட் கார்டு எண்களை ஏமாற்றி பணம் பெறச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புவது அடங்கும்.
கடந்த வருடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை 02 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.