NewsWhatsapp-ல் மேலும் 5 புதிய வசதிகள்!

Whatsapp-ல் மேலும் 5 புதிய வசதிகள்!

-

Whatsapp செயலி காலத்துக்கு காலம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக ஐந்து வசதிகளை தமது செயலியில் Whatsapp  நிறுவனம் இணைத்துள்ளது.

அதன்படி படங்களில் இருந்து எழுத்துருக்களை பிரதி செய்து, அதனை பகிர முடியும். இந்த வசதி முதலில் ஐபோன்களில் (OS16) அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஏனைய தொலைபேசிகளுக்கும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்களை forward செய்யும் போது அதனுடன் தகவல்களை அல்லது குறிப்புகளை இணைத்து அனுப்பலாம். அத்துடன் ஏற்கனவே படத்துடன் இருக்கின்ற தகவல் மற்றும் குறிப்புகளை நீக்கிவிட்டு forward செய்ய முடியும்.

Google Drive பயன்படுத்தாமலேயே android தொலைபேசிகளில் இருந்து Whatsapp தொடர்பாடல் பதிவுகளை (set history) பகிர்ந்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்பாடல் பதிவுகள் மூன்றாம் தரப்புக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.

குரல் பதிவை status வைக்கலாம். இப்போதும் பலர் Whatsapp-களில் படங்கள், வீடியோக்களை ஸ்டேட்டசாக வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் சிலவகை android தொலைபேசிகளில் குரல் பதிவினை Whatsapp ஸ்டேடசாக வைக்கும் வசதி அறிமுகமாகிறது.

Proxy ஊடாக Whatsapp பயன்படுத்தலாம் – சில நாடுகளில் சமுக வலைத்தளங்கள் முடக்கப்பட்டாலும், Whatsappபை பயன்படுத்தக்கூடிய வகையிலான proxy வசதியை வட்சப் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஊடாக V.P.N பாவிப்பது போல பயன்படுத்த முடியும்.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...