இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொவிட் சட்டங்களை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கடந்த 17ஆம் திகதி திட்டமிட்டிருந்தது. பின்னர் அது 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, புதிய சட்டத் தொகுப்பை சுமத்த வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு சட்டத் தொடர் கொண்டுவரப்படும் பட்சத்தில் சுகாதார அமைச்சின் ஊடாக மாத்திரமே அமுல்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.