Breaking Newsசீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் பதற்றம் – 9 பேர் துப்பாக்கிச் சூட்டில்...

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் பதற்றம் – 9 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

-

சீன நாட்காட்டியின் படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகின்ற நிலையில், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று (அந்நாட்டு நேரப்படி இரவு 10.30 மணி) சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.. இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் உயிரிழந்ததோடு, மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து பொலிஸர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட iPhone” – டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான சமீபத்திய iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகிறார். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற...

Online-இல் வெளியிடப்பட்ட வீடியோவால் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பல்

விக்டோரியாவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று கூறப்படும் ஒரு குழு, தங்கள் குறும்புத்தனங்களை ஆன்லைனில் வெளியிட்ட பின்னர், ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு, லைக்குகள் மற்றும்...

ட்ரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலிய உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான...

சீனாவின் ஆடம்பர செலவினத்தால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய வேலைகள் ஆபத்தில்

சீனா தனது தடுமாறும் பொருளாதாரத்திற்கு மானியம் வழங்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுவதால், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய உற்பத்தி வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று புதிய ஆராய்ச்சி...