வாத்து வேட்டையை தடை செய்ய விக்டோரியா மாநில அரசு தயாராகி வருகிறது.
அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் – குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் வாத்து வேட்டையாடுவதைத் தடை செய்யும் விதிமுறைகள் விக்டோரியாவிலும் நடைமுறையில் இருக்கும்.
விக்டோரியா மாநில அரசு, வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் வாத்து வேட்டை சீசனுக்கு முன்னதாக புதிய விதிமுறைகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, பல தரப்பில் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்பட்டு, அவை அனைத்தையும் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்க மாநில அரசு தயாராக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 1990 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வாத்து வேட்டை முதன்முதலில் தடை செய்யப்பட்டது.
1995 இல் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் 2005 இல் குயின்ஸ்லாந்தில் வாத்து வேட்டை தடை செய்யப்பட்டது.