ஆஸ்திரேலியாவில் கடந்த 25 நாட்களில் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப்பநிலை அதிகரிப்புடன் பலர் நீர்நிலை நடவடிக்கைகளில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்பதே இதற்குக் காரணம்.
ஆறுகள் அல்லது கடலில் நீந்தும்போது கவனமாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
நாளைய அவுஸ்திரேலியா தினமான பொது விடுமுறையுடன் அதிகளவான மக்கள் சுற்றுலா செல்வதை கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் விக்டோரியாவில் மட்டும் 29 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.