அன்பர்களுக்கு வணக்கம்.
மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் புதுமைக் கவிஞன் கம்பனின் விழாவினை இரண்டு நாட்களாக அரங்கேற்றக் காத்திருக்கின்றோம்.
இன்னும் 30 நாட்களில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களின் பங்குபற்றுதலோடு தமிழ் அமுதம் சுவைக்கத் தயாராகுங்கள்.
கடல்கடந்து வரும் தமிழ்க்கடல்களின் சாரலில் நனையக் கடலெனத் திரண்டு வாருங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களுக்கும் விழாச் செய்தியை அறியத் தந்து அவர்களையும் கம்பன் விழாவுக்கு ஆற்றுப்படுத்துங்கள்.
பட்டிமண்டபம், வழக்காடுமன்றம், சுழலும் சொற்போர், தனியுரை எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.
கல்வியில் பெரியனாம் கம்பனைப் போற்றுவது நம் உயிரனைய அன்னைத் தமிழைப் போற்றுவதே! அனைவரும் வருக!