ஆஸ்திரேலியா தினத்தன்று சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு எச்சரித்துள்ளது.
உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று கூட சிட்னியில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸில் தற்போதுள்ள சட்டத்தின்படி, முறையான அனுமதியின்றி பட்டாசுகளைப் பயன்படுத்துவோ, விற்கவோ, வாங்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது கடத்தவோ செய்பவருக்கு $27,500 அபராதமும், 12 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
சரியான தரம் மற்றும் பயிற்சி இல்லாமல் பட்டாசுகளை பயன்படுத்தினால், பெரும் அழிவு ஏற்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு வலியுறுத்துகிறது.