ஆஸ்திரேலியா தினம் இன்று ஆகும்.
1788 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் ஜாக்சனில் ஆய்வாளர்கள் குழு இறங்கி பிரிட்டிஷ் கொடியை ஏற்றிய நாளைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
அப்போது ஆஸ்திரேலியா நியூ ஹாலந்து என்று அழைக்கப்பட்டது.
எனினும், இந்நாட்டின் பழங்குடியின மக்கள் ஜனவரி 26 ஆம் தேதியை படையெடுப்பு நாள் என்று அழைக்கின்றனர்.
எனவே அந்த நாளை வேறொரு நாளில் கொண்டாட வேண்டும் என்ற சித்தாந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அணிவகுப்பு நடத்த வேண்டாம் என விக்டோரியா மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது.