ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் ஏறக்குறைய 40 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கெய்ர்ன்ஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு 09:00 மணிக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் 2 தடவைகள் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று பிற்பகல் 04.15 மணியளவில் ஒசாகாவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜேக்யூ 16 விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரவிருந்த பயணிகள், ஜப்பானில் இந்த நாட்களில் கடும் குளிரால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.