Newsபேஸ்புக்கில் Comeback கொடுத்த Trump!

பேஸ்புக்கில் Comeback கொடுத்த Trump!

-

பேஸ்புக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்ட அறிக்கையில், ‘ஜனாதிபதி தோ்தல் முடிவுகளை ஏற்காமல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் பேஸ்புக்கில் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு கால தடை முடிவுக்கு வருகிறது. அவா் இனியும் அதே போன்ற பதிவுகளை வெளியிட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து டிரம்ப் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இதே விவகாரத்தில் டிரம்புக்கு ட்விட்டா் விதித்திருந்த தடையை, தொழிலதிபா் எலான் மஸ்க் அந்த சமூக ஊடகத்தைக் கையகப்படுத்திய பிறகு நீக்கினாா்.

அதற்குப் பிறகும் ட்விட்டரில் டிரம்ப் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை.

நன்றி தமிழன்

Latest news

தினமும் காலையில் காபி குடிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

தினமும் காலையில் காபி குடித்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, காலையில் காபி குடிப்பதால் ஒருவரின் இதய ஆரோக்கியம் மேம்படும்...

லாஸ் ஏஞ்சல்ஸ் பேரிடர் மேலாண்மைக்கு உதவ தயாராக உள்ள ஆஸ்திரேலியா

லாஸ் ஏஞ்சல்ஸைப் பாதித்துள்ள கடுமையான மற்றும் பேரழிவுகரமான காட்டுத்தீக்கு மத்தியில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவத்...

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம்...

விக்டோரிய இளைஞர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. My Learners Free Lesson...

மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நாட்களாக காணாமல் போன ஆஸ்திரேலிய இளைஞர்

நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ...