அமெரிக்காவின் மத்திய தகவல் பணியகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சார்ள்ஸ் மெகோனிகல் என்ற முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை ஒலெக் டெரிபாஸ்கா மீறியதாக அமெரிக்கா முன்பு குற்றம் சாட்டியிருந்தது.
சார்ள்ஸ் மெகோனிகல் 2018 இல் அமெரிக்காவின் மத்திய தகவல் பணியகத்தில் (FBI) இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த சனிக்கிழமை அவர் இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பும் போது நியூயோர்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி தமிழன்