நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
03 மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் மழை நேற்று 15 மணித்தியாலங்களில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்தின் முக்கிய விமான நிலையமான ஆக்லாந்து சர்வதேச விமான நிலையமும் பல அடி தண்ணீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை, ஆக்லாந்தில் ஜனவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு 1986 இல் 206 மி.மீ. இந்த ஆண்டு 320 மி.மீ., பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், பிரபல பாடகர் எல்டன் ஜான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி உட்பட, வார இறுதியில் ஆக்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.