எரிவாயு கசிவு காரணமாக சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாகி வருகின்றன.
விமான கட்டுப்பாட்டு கோபுரத்தில் இந்த வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல சர்வதேச விமானங்கள் தற்காலிகமாக மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்காவில் இருந்து வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் பிரிஸ்பேனுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிட்னி விமான நிலையத்தின் அதிகாரிகள் வழமையான நடவடிக்கைகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.