Cinemaநடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!

நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!

-

நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வஸந்த் ரவி என ஓட்டுமொத்த நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதியின் சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனால், நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...