விக்டோரியா மாநிலத்தில் காவலில் உள்ள கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை திருத்தியமைக்க மாநில அரசு தயாராகி வருகிறது.
பொலிஸ் காவலில் இருந்த பழங்குடிப் பெண் ஒருவரின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என விசாரணை அறிக்கையில் தெரியவந்ததை அடுத்து பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.
விக்டோரியாவின் ஜாமீன் நிபந்தனைகள் கடைசியாக 2018 இல் திருத்தப்பட்டன.
இத்திருத்தங்கள் மூலம் பழங்குடியின மக்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் கைதிகளில் பழங்குடியினர் 8.2 சதவீதம் மற்றும் பெண் கைதிகளில் 10 சதவீதம் பேர் பழங்குடியினர்.