Dating Apps மூலம் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஆஸ்திரேலியர்களில் 3/4 பேர் சில வகையான துஷ்பிரயோகம் அல்லது வன்முறையை அனுபவிப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை தொடர்பானவை என்று தெரியவந்துள்ளது.
தற்போது 03 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் டேட்டிங் ஆப்ஸைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் அனுபவங்கள் குறித்து அளித்த தகவலின்படி இந்த கணக்கெடுப்பு முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Dating Apps மூலம் நண்பர்களை சந்தித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.