Newsஅயோத்தி ராமஜென்ம பூமியின் பிரமாண்டமான ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அயோத்தி ராமஜென்ம பூமியின் பிரமாண்டமான ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

-

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த கோயில் உள்ளிட்ட ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். 

அயோத்தியின் ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்பவரின் போனுக்கு அழைத்த அவர், அந்த வளாகத்தை நேற்று(02) காலை 10 மணிக்கு தகர்க்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 

இதனையடுத்து , இது குறித்து மாவட்ட பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

உடனடியாக ராமஜென்மபூமி வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் மாவட்டத்தின் அண்மித்த முக்கிய பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அதேநேரம், இந்த மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமஜென்ம பூமி பொலிஸார், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபரை கைது செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...