சில மருத்துவர்கள் உட்பட சுகாதார நிபுணர்களின் பாலியல் துஷ்பிரயோக புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பல ஊடக நிறுவனங்கள் 06 மாதங்களாக நடத்திய விசாரணை வெளிப்படுத்தல் ஒன்றின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் சிலர் பதிவு செய்யப்பட்ட சுகாதார நிபுணர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி நோயாளிகளும் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகி வருவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையைத் தடுக்க மாநில அரசுகள் மட்டுமன்றி மத்திய அரசு மட்டத்திலும் அதிகபட்ச சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் உறுதியளிக்கிறார்.