வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 5200 டன் மென்மையான பிளாஸ்டிக்கை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளால் Coles மற்றும் Woolworths சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கழிவுகளை மீள்சுழற்சி வேலைத்திட்டத்திற்காக ஒப்படைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தும் பல மாதங்களாக இரண்டு பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் 15 க்கும் மேற்பட்ட கிடங்குகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே, மறுசுழற்சி திட்டம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மென்மையான பிளாஸ்டிக் இருப்பு 03க்கும் மேற்பட்ட நீச்சல் குளங்களை நிரப்பும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகளின் அளவை 03 மடங்கு அதிகரிக்க நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.