Newsகேரளாவில் தீப்பிடித்து எரிந்த கார் - நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு!

கேரளாவில் தீப்பிடித்து எரிந்த கார் – நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு!

-

கேரள மாநிலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.

இது தொடர்பில் கண்ணூர் நகர காவல் ஆணையர் அஜித்குமார் கூறியது: 

கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரிஜித் (35), அவரது மனைவி ரீஷா (26). ரீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிஜித் உறவினர்களுடன் அவரை காரில் அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது கார் தீப்பிடித்தவுடன் முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றுள்ளனர். 

அதற்குள் தீ கார் முழுவதும் பரவியதில் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். பின்னால் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

மேலும் , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ஆணையர் தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மூடப்படும் மேலும் 4 தபால் நிலையங்கள்

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மேலும் நான்கு தபால் நிலையங்களை மூட ஆஸ்திரேலியா தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் உள்ளூர்வாசிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் இதற்கு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...