காமன்வெல்த் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 1/4 வாடிக்கையாளர்கள் வாரத்திற்கு 6 முறையாவது மோசடி தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெறுவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
எனவே, ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் முன்பு வாடிக்கையாளரின் அடையாளத்தைச் சரிபார்ப்பது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாத இறுதியில் அவுஸ்திரேலியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் மோசடியில் வீணாகும் பில்லியன் கணக்கான டொலர்களை மிச்சப்படுத்தும் என காமன்வெல்த் வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம், காமன்வெல்த் வங்கியின் மொபைல் போன் செயலியில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.