பொருளாதார மந்தநிலையில் சிக்காமல் இருக்க புதிய வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு ஆஸ்திரேலியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், இந்த முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவை எப்போது செயல்படுத்தப்படும் என்பதை சரியாக அறிவிக்க முடியாது என்று கூறினார்.
எந்தவொரு புதிய வரிகளும் கூட்டாட்சித் தேர்தலின் போது தொழிற்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியை மீறுவதாகும்.
காரணம், புதிய வரிகளை அறிமுகப்படுத்த மாட்டோம் என்றும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.