நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை போக்குவரத்து கட்டணம் (டோல்) மூலம் மாநில அரசு ஆண்டுக்கு $2 பில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறது என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இதன் மூலம் மாநிலத்தில் தினமும் சுமார் 10 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், நியு சவுத் வேல்ஸ் மாநில அரசு தற்போது நடைபெற்று வரும் பல கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்கத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அவற்றின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை காட்டுகிறது.
இந்தப் பணமும் மக்கள் செலுத்தும் வரிப்பணம் என்பதால், அது எப்படிச் செலவழிக்கப்படுகிறது என்பதை அறியும் உரிமை அவர்களுக்கு இருப்பதாக அறிக்கை காட்டியுள்ளது.