அட்லாண்டிக் பெருங்கடலில் உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பலூன், தனது ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவால் ஏவப்பட்ட பலூன் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் மொன்டானாவின் வானில் முதன்முதலில் காணப்பட்டது.
இந்த சீன பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் பல விமான நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தது.
இந்த சீன பலூன் 03 சாதாரண பேருந்துகளின் அளவுள்ளதாகவும், வானத்தில் சுமார் 60,000 அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பலூனை சீனா உளவு பார்க்க பயன்படுத்தியதாக அமெரிக்கா சந்தேகிக்க, இது வானிலை தகவல்களை பெற பயன்படுத்தப்படும் பலூன் என்று சீனா கூறியது.