பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தொடர்பாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கலாசார மோதலை உருவாக்குவதே அவர்களின் நோக்கம் என பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
என்ன தடைகள் வந்தாலும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்ட சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று அந்தோணி அல்பானீஸ் உறுதியளிக்கிறார்.
பழங்குடியின மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்துவது உட்பட பல சட்ட சீர்திருத்தங்களை இந்த முன்மொழிவு கொண்டுள்ளது.
ஆனால், எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது என பல தரப்பினரும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.