News30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

-

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

அந்த நாய்க்குட்டிக்கு உலகின் மிகப் பழமையான நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

30 வயதான போபி, 23 வயதான சிஹுவாஹுவா என்ற ஸ்பைக்கிடம் இருந்து, உலகிலேயே மிகவும் அதிக நாள்கள் வாழும் நாய்க்கான உலக சாதனைப் படைத்து ஜனவரி மாதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

உலகின் மிக வயதான நாய் ஸ்பைக் சிஹுவாஹுவா என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த சில நாள்களுக்குப் பிறகு, புதிய சாதனை படைத்துள்ளது பேபி.

கின்னஸ் உலக சாதனைகளின்படி, Rafeiro do Alentejo என்ற இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14 வயது வரை மட்டுமே வாழ்பவை. ஆனால், இதே இனத்தைச் சேர்ந்த இந்த பேபி நாய், பெப்ரவரி 2 ஆம் திகதி 30 ஆண்டுகள் மற்றும் 267 நாள்கள் வாழ்ந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 1939 ஆம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவில் ஒரு நாய் 29 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது பேபி அந்த நாயின் சாதனையை முறியடித்துள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...