விக்டோரியா மாநிலத்தில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு நம்பர் பிளேட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.
குளோன் காப்பி தொழில்நுட்பம் மற்றும் பிரிண்டிங் முறைகளை பயன்படுத்தி வாகன நம்பர் பிளேட்டுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டுகளை செய்துவிட்டு அதிவேகமாக தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது.
விக்டோரியாவில் வசிப்பவர்கள் வாகனங்களின் நம்பர் பிளேட் தோன்றும் வகையில் சமூக ஊடகங்களில் அல்லது பல்வேறு இணையதளங்களில் வாகனங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையை தடுக்கும் வகையில், விக்டோரியாவில் வாகன நம்பர் பிளேட்டுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.