Newsஅகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

-

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். 

இந்த பயணத்தின் போது விபத்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் கிரீஸ் நாட்டிற்குள் நுழைய பயணம் மேற்கொண்டுள்ளனர். 

கீரிஸ் நாட்டின் லிரொஸ் தீவுக்கூட்டம் அருகே வந்தபோது கடற்பாறைகள் மீது மோதி படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், படகு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 

எஞ்சிய 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

அகதிகளை தங்கள் நாட்டிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமாக துருக்கி அனுப்பி வைப்பதாக கிரீஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...