சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அலெப்போ நகரில் உள்ள தொன்மையான கோட்டை இடிந்து விழுந்தது.
இதுகுறித்து அந்நாட்டு தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையில், அலெப்போ கோட்டையில் இருந்த ஒட்டோமான் பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட சிறிய கோட்டை இடிந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலெப்போ கோட்டையின் சுற்றுச்சுவரும் முற்றிலும் சேதமடைந்ததாகவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கோட்டை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்