Newsதுருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் பலி!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் பலி!

-

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

People and emergency teams rescue a person on a stretcher from a collapsed building in Adana, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (IHA agency via AP)

இதில் சிரியாவில் மட்டும் 1,444 பேரும்இ துருக்கியில் 2,300 பேரும் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் கூறினர்.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி ஜனாதிபதி எர்துவான் கூறியுள்ளார். 1939 ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...