Newsதுருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவு!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவு!

-

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முந்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை கஹ்ராமன்மாராஸ், காசியான்டெப், சன்லியுர்பா, தியர்பாகிர், அதானா, அதியமான், மாலத்யா, உஸ்மானியே, ஹடாய் மற்றும் கிலிஸ் என பட்டியலிட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போ, இட்லிப், ஹமா மற்றும் லதாகியா மாகாணங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவுகளில் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 36 மணி நேரத்தில், துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பொதுப் பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களே பின்அதிர்வுகள் ஆகும்.

4 ரிச்டர் அளவிலான பின்அதிர்வு பொதுவாக லேசானதாகக் கருதப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க நடுக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சுவரில் விரிசல் போன்ற சிறிய சேதத்தை ஏற்படுத்தலாம். ரிச்டர்-5 நிலநடுக்கம், வரையறையின்படி, ரிச்டர்-4 ஐ விட 10 மடங்கு தீவிரமானது மற்றும் கட்டிடங்களுக்கு மிதமான சேதத்தை ஏற்படுத்தும்.

ரிச்டர்-6 நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது மற்றும் ரிச்டர்-4-ஐ விட 100 மடங்கு வலிமையானது. இந்த வகையான நிலநடுக்கம், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், நிறைய சேதங்களை ஏற்படுத்தும்.

கடந்த 36 மணி நேரத்தில், தென்கிழக்கு துருக்கியில் குறைந்தபட்சம் 81 எண்ணிக்கையிலான 4 ரிச்டர் நிலநடுக்கங்கள், 20 எண்ணிக்கையிலான 5 ரிச்டர் நிலநடுக்கங்கள், மூன்று எண்ணிக்கையிலான 6 ரிச்டர் நிலநடுக்கங்கள் மற்றும் இரண்டு 7 ரிச்டர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன

நன்றி தமிழன்

Latest news

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

மெல்பேர்ணில் உடைமாற்றும் அறையில் அதிர்ச்சி – பதறியடித்து ஓடிய பெண்

ஆஸ்திரேலியாவில் உடைமாற்றும் அறையில் திரைச்சீலையை, ஆண் ஒருவர் ஆக்ரோஷமாக திறந்ததால் பெண்ணொருவர் அதிர்ச்சியடைந்தார்.  மெல்பேர்ணைச் சேர்ந்த Rita எனும் பெண்ணொருவர், பிரபல ஆடை நிறுவனமான Zara-இன் கடை...

மெல்பேர்ணில் ஆயிரக்கணக்கானோருக்கு சிரமத்தை ஏற்படுத்திய Triple-Zero

மெல்பேர்ணின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 14,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Optus Triple-Zero செயலிழப்பால் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இன்று காலை Frankston மற்றும் Mornington தீபகற்பப் பகுதிகளில்...