NewsVodafone இலிருந்து 2 நாடுகளுக்கு ஒரு வாரத்திற்கு இலவச அழைப்புகள்!

Vodafone இலிருந்து 2 நாடுகளுக்கு ஒரு வாரத்திற்கு இலவச அழைப்புகள்!

-

அடுத்த வாரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து துருக்கி மற்றும் சிரியாவுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என அந்நாட்டின் முக்கிய தொலைபேசி நிறுவனமான வோடபோன் முடிவு செய்துள்ளது.

பிராந்தியத்தை பாதித்த கடுமையான நிலநடுக்கத்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நலம் விசாரிப்பதற்கு உதவும் ஒரு வழியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வோடபோன் பயனர்கள் நாளை நள்ளிரவு முதல் 16ம் தேதி நள்ளிரவு வரை சிரியா மற்றும் துருக்கிக்கு சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், இந்தச் சலுகை வழக்கமான அழைப்புகளுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு அட்டவணைப்படி கட்டணம் விதிக்கப்படும்.

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12,000ஐ தாண்டியுள்ளது.

குறித்த பிராந்தியத்தில் இருந்த 04 அவுஸ்திரேலியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய 03 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் வெளிவிவகார திணைக்களம் அறிவித்துள்ளது.

Latest news

Hunter Valley விபத்து குறித்து வெளியான அண்மை செய்திகள்

ஆஸ்திரேலியாவில் Hunter Valley-இல் நடந்த பேருந்து விபத்திற்கு காரணமான ஓட்டுநர் பிரட் ஆண்ட்ரூ பட்டனின் மேல்முறையீடு நீதிமன்றத்தால் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2023 இல், கிரேட்டா பகுதியில்...

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

கருப்பாக மாறிவரும் மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை

மெல்பேர்ணின் பிரபலமான St Kilda கடற்கரையில் உள்ள நீர் கருப்பு சேற்றாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. St Kilda மெரினாவின் நுழைவாயிலை ஆழப்படுத்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட...

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...