வடமாகாணத்தில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு அரச எதிர்கட்சி தயாராகி வருகிறது.
மதுவிலக்கு நீக்கப்பட்ட உடன் அலைஸ் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் உட்பட தொழிற்கட்சி அரசாங்கம் மதுவிலக்கு நீக்கப்படும் என்று தெரிந்தும் எந்தவிதமான முன்னெடுப்புகளையும் திட்டமிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததன் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ், தனது அரசாங்கத்தின் தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதால் வருத்தம் தெரிவிக்கும் நோக்கம் இல்லை என்று வலியுறுத்துகிறார்.