Sportsபார்டர் கவாஸ்கர் தொடர் - இந்திய வீரரின் செயலால் அதிர்ச்சியடைந்த ஸ்டீவ்...

பார்டர் கவாஸ்கர் தொடர் – இந்திய வீரரின் செயலால் அதிர்ச்சியடைந்த ஸ்டீவ் ஸ்மித்!

-

இந்தியா மற்றும் ஆவுஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்பு ஆவுஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

அப்படி இருக்கையில் தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த இரண்டு தோல்விளுக்கும் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் முனைப்புடன் உள்ளது.

மறுபக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் வெல்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இரு அணிகளும் தங்களின் வெற்றிக்கு போராடும் என்பதால் நான்கு டெஸ்ட் போட்டிகளும் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆவுஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர், சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால் ஜடேஜாவின் சுழற் பந்துவீச்சில் அவர்கள் இருவரும் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

64 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சுமார் ஐந்து மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக ஆட களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் நாளில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து சற்று அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். மறுபக்கம் ராகுல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தார்.

முதல் நாளில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி உள்ள சூழலில், ரவீந்தர் ஜடேஜாவிடம் ஸ்டீவ் ஸ்மித் தம்ப்ஸ் அப் காட்டியதும் அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆவுஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 21-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசி இருந்தார். அப்போது அவர் பந்தை எதிர்கொண்ட ஸ்மித் அதை அடிக்க முடியாமல் திணறிய நிலையில், அந்த பந்து ஸ்டம்ப்க்கு அருகே சென்றது. இதனை பார்த்ததும் ஜடேஜாவை நோக்கி Thumbs Up ஸ்டீவ் ஸ்மித் காட்டினார். தொடர்ந்து, அதே போல ஜடேஜா வீசிய பந்தில் தான் ஸ்மித் அவுட்டாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...