Newsமனைவியுடன் விவாகரத்து - விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்

மனைவியுடன் விவாகரத்து – விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்

-

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக பில் கேட்ஸ் திகழ்ந்து வருபவர் .

இவரது முன்னாள் மனைவி மெலிண்டா. இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இதனால் அவர்களது 27 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பவுலா ஹர்ட்டின் கணவர் மார்க் ஹர்ட் பிரபல ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு கேத்ரின், உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மார்க் மரணம் அடைந்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள். கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதே போல பல இடங்களுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுவருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. டென்னிஸ் மீது அவர்கள் வைத்து இருந்த ஆர்வம் தான் 2 பேரையும் காதலில் விழ வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை 2 பேருமே இதுவரை மறுக்கவில்லை. பவுலா ஹர்ட் தொழில் மேலாண்மை பட்டப்படிப்பு முடித்துள்ளார், அவர் விற்பனை மற்றும் நிர்வாக துறையில் நீண்ட காலம் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. "ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது" என்று பிரதமர்...

விக்டோரியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டும்

விக்டோரியாவில் நீண்ட வார இறுதியிலிருந்து அடுத்த வாரம் வரை வரலாறு காணாத வெப்பமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெல்பேர்ணில் 40 டிகிரி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் தவறுகளை படம்பிடிக்கும் AI கேமரா

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 800 ஓட்டுநர்கள் புதிய AI சாலை பாதுகாப்பு கேமராக்களால் பிடிக்கப்படுவதாக காவல்துறை கூறுகிறது. இந்த நீண்ட வார இறுதியில் போக்குவரத்து...

உலகையே வியப்பில் ஆழ்த்திய Alex Honnold-இன் புதிய சாதனை

உலகப் புகழ்பெற்ற "Free Solo" மலையேற்ற வீரர் Alex Honnold, தைவானில் உள்ள 508 மீட்டர் உயரமுள்ள Taipei 101 கட்டிடத்தை வெற்றிகரமாக ஏறி புதிய...

உலகையே வியப்பில் ஆழ்த்திய Alex Honnold-இன் புதிய சாதனை

உலகப் புகழ்பெற்ற "Free Solo" மலையேற்ற வீரர் Alex Honnold, தைவானில் உள்ள 508 மீட்டர் உயரமுள்ள Taipei 101 கட்டிடத்தை வெற்றிகரமாக ஏறி புதிய...

அடிலெய்டில் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை

அடிலெய்டின் வடகிழக்கில் ஒரு பரபரப்பான சாலையில் ஒரு சிறுவன் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டான். வாகனம் ஒரு சந்திப்பு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திறந்திருந்த காரின் கதவு...