இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஹொட்டல் ஒன்று இடிந்து கடலில் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.
மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நன்றி தமிழன்