அவுஸ்திரேலியா முழுவதும் பிராந்திய பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நஷ்டம் மற்றும் செயல்பாட்டு சிரமம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 80க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செனட் நடத்தும் இந்த விசாரணையில் உண்மையான காரணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிலைமை ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
இறுதி அறிக்கை டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்படும்.
அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து 04 முக்கிய வங்கிகளும் தற்போது பிராந்திய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகளை மூடியுள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு வங்கிக் கிளை கூட இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.