இணைதள தேடிபொறி நிறுவனமான ‘Yahoo’ 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நிலைத்தன்மையின்மை காரணமாக செலவை குறைக்க தங்கள் நிறுவனத்தின் 12 சதவிகித ஊழியர்களான 1,000 பேரை ‘Yahoo’ இந்த வாரம் பணி நீக்கம் செய்ய உள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் எதிர்வரும் மாதங்களில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ‘Yahoo’ திட்டமிட்டுள்ளது.
தகவல் தொழிநுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி தமிழன்