Sportsவிபத்துக்கு பின் ரிஷப் பண்ட் வெளியிட்ட புகைப்படம்

விபத்துக்கு பின் ரிஷப் பண்ட் வெளியிட்ட புகைப்படம்

-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

வீதியின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கால்முட்டியில் சிகிச்சை செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். சிகிச்சைக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை ‘ஒரு படி முன்னேற்றம்’ என்ற வாசகத்துடன் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

கம்பூன்றி நடப்பது போல் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

நன்றி தமிழன்

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...