Sportsஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் அபராதம் - பார்டர் கவாஸ்கர் தொடர்

ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் அபராதம் – பார்டர் கவாஸ்கர் தொடர்

-

இந்தியா – ஆவுஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கிண்ணம் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், போட்டியின் முதல் நாளில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசி கொண்டிருந்த போது, பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார். 

முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிந்தது. ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக இதனை ஆவுஸ்திரேலிய மீடியாக்கள் தெரிவித்தன. 

ஆவுஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. 

இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், 

ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தது. 

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

மெல்போர்னில் 7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய லாரி ஓட்டுநர் நிரபராதியா?

7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய பள்ளிப் பேருந்து விபத்தில் லாரி ஓட்டுநரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மே 2023 இல் மெல்பேர்ணின் மேற்கில் ஒரு பள்ளிப் பேருந்தும்...

Cannes சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடை

கண்ணியம் கருதி கேன்ஸ் Cannes கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் நிர்வாணம் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது. "கண்ணியத்தின் காரணங்களுக்காக, சிவப்பு கம்பளத்தில்...