Newsதுருக்கி-சிரியா மக்களுக்கு அவசரகால விசா வழங்க ஜெர்மன் அரசாங்கம் முடிவு

துருக்கி-சிரியா மக்களுக்கு அவசரகால விசா வழங்க ஜெர்மன் அரசாங்கம் முடிவு

-

துருக்கி-சிரியா மக்களுக்கு உதவிட ஜெர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

எனவே ,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது. 

இதுபற்றி அந்நாட்டு உள்துறை அமைச்சர் நான்சி பீசர் தெரிவிக்கையில் ,

பில்த் என்ற தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மன்க்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மன்க்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம். 

அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என கூறியுள்ளார்.

நிலநடுக்க பாதிப்பில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவியாக, இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை விமானங்களில் அனுப்பி வருகின்றன.

20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பேரிடர் நிவாரண படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

காசோலைகளின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தும் திட்டமிடும் மத்திய அரசு

2026 முதல் அத்தியாவசியப் பொருட்களுக்கான பணத்தை வணிகங்கள் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. அதே நேரத்தில் காசோலைகளின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தும் திட்டத்தையும்...

$2.5 மில்லியன் லாட்டரி வென்ற வெற்றியாளரை தேடும் அதிகாரிகள்

லாட்டரி அதிகாரிகள் வார இறுதியில் வென்ற லோட்டோ லாட்டரியில் வென்ற $2.5 மில்லியன் சூப்பர் பரிசின் வெற்றியாளரைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மர்ம வெற்றியாளர் சனிக்கிழமை நடந்த...

விக்டோரியாவுக்கு கிடைத்த 2024 Miss Universe கிரீடம்

இந்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கிஜார் தெயில்விக் (Victoria Kjær Theilvig) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த போட்டியில் வெற்றி...

23 வருடங்களுக்கு பின் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊடக நிர்வாகி

ஆலன் ஜோன்ஸ், ஒரு முன்னாள் பெரிய ஊடக நிர்வாகி, இரண்டு தசாப்தங்களாக அநாகரீக நடவடிக்கை மற்றும் முறையற்ற பாலியல் தொடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக சிட்னியில்...

23 வருடங்களுக்கு பின் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊடக நிர்வாகி

ஆலன் ஜோன்ஸ், ஒரு முன்னாள் பெரிய ஊடக நிர்வாகி, இரண்டு தசாப்தங்களாக அநாகரீக நடவடிக்கை மற்றும் முறையற்ற பாலியல் தொடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக சிட்னியில்...

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முன்னறிவிப்பு

காலநிலை மாற்றம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வரும் அகதிகளின் அதிகரிப்பு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய...