Newsவெளிநாட்டு பெண்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கும் அர்ஜென்டினா!

வெளிநாட்டு பெண்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கும் அர்ஜென்டினா!

-

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன.

குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது. 

மேலும் அந்த குழந்தையின் பெற்றோரும் விரைவாக குடியுரிமை பெற முடிகிறது.

இதனால் ரஷ்யாவை சேர்ந்த பெண்கள் பலரும் தங்களின் பிரசவ காலத்தில் அர்ஜென்டினாவுக்கு பயணம் செய்து, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த சூழலில் சமீபத்திய மாதங்களில் அர்ஜென்டினா வரும் ரஷ்ய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த சில மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினா வந்துள்ளதாகவும், கடந்த வியாழக்கிழமை ஒரே விமானத்தில் 33 கர்ப்பிணிகள் வந்ததாகவும் அர்ஜென்டினாவின் குடியுரிமை அதிகாரிகள் கூறினர். 

அவர்களில் 3 பெண்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலான கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் அர்ஜென்டினாவுக்கு வருவதாகவும், அவர்கள் சுற்றுலா பயணிகள் என்கிற போர்வையில் நாட்டுக்குள் நுழைவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அர்ஜென்டினாவின் பாஸ்போர்ட், ரஷ்;ய பாஸ்போர்ட்டை விட அதிக சுதந்திரத்தை தருவதால் ரஷ்ய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமையை பெற விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதாவது, ரஷ்யர்கள் 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஆனால் அர்ஜென்டினா குடியுரிமை பெற்றவர்கள் 171 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...