வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க குயின்ஸ்லாந்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஜாமீன் வழங்கும் நடவடிக்கையில், அவரது முந்தைய குற்றங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு 07 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களாக அதிகரிக்கப்படும்.
இரவில் குற்றம் நடந்தாலோ அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலோ அதிகபட்ச சிறை தண்டனை 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான குற்றச் செயல்களுக்கு துணைபோகும் நபர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இளம் குற்றவாளிகளின் புனர்வாழ்விற்காக 02 புதிய நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் தெரிவித்தார்.