Newsதுருக்கி - சிரியா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை...

துருக்கி – சிரியா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது!

-

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை.

கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலியானோர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி நிலநடுக்கத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

நன்றி தமிழன்

Latest news

MATES விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் MATES விசாவிற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமக்கள் முதலில் வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Mobility Arrangement for Talented Early-professionals...

 முதல் முறையாக ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள விஸ்வாஸ்குமார்

ஜூன் மாதம் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வஷ்குமார் ரமேஷ், முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...