ஆஸ்திரேலியா முழுவதும் மேலும் 20 வங்கிக் கிளைகளை மூட வெஸ்ட்பேக் வங்கி முடிவு செய்துள்ளது.
இதனால் சுமார் 100 பேர் வேலை இழக்க நேரிடும் என வங்கி சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த ஆண்டு வங்கிக் கிளைகள் செயல்பாட்டு நஷ்டம் எனக் கூறி மூடப்பட்டாலும், மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு பெரும் போனஸ் வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெஸ்ட்பேக் வங்கி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 04 வீதத்தால் அதன் நிகர லாபம் அதிகரித்துள்ளதாகவும், அது 5.65 பில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளதாகவும் சமீபத்தில் வெளிப்படுத்தியது.
மேலும் செலவுகள் 19 சதவீதம் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.