பல துறைகளில் உள்ள தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க கிரேட் பிரிட்டன், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைப்பதில் வடக்கு பிரதேச மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.
விருந்தோம்பல், கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களில் சுமார் 6,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
முதல் கட்டமாக, கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த 100 ஊழியர்கள் விரைவில் விருந்தோம்பல் துறையில் சேர உள்ளனர்.
கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்ப இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தொழிலாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மே மற்றும் ஜூன் மாதங்களில் திறமையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விரைவுபடுத்தவும் வடமாநில அரசு திட்டமிட்டுள்ளது.
முதலாவதாக, 04 வருட வேலை அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் மற்றும் 03 வருடங்களின் முடிவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.