Newsபூமியை நெருங்கும் ராட்சத விண்கல் - விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல் – விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

-

பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் சுமார் ஒரு கி.மீ. அளவு அகலம் கொண்டது என்றும், 1,870 முதல் 4,265 அடிகள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாக 82 அடிகளுக்கும் குறைவான சிறிய விண்கற்கள் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

இவை வளிமண்டலத்திற்குள் நுழையும் போதே எரிந்து சிதைந்துவிடும். ஆனால் தற்போது பூமியை நெருங்கி வரும் விண்கல், நமது பூமிக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக கூறமுடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். 

இது அடுத்த வாரம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மோதலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தனர். 

இந்த நிலையில் 199145 (2005 YY128) விண்கல் பூமிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். 

இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப்பாதையை பெப்ரவரி 15 மற்றும்16 ஆகிய திகதிகளுக்குள் கடந்து செல்லும் என்றும், இதனை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...